வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 12 ஜனவரி 2022 (18:56 IST)

விதார்த் குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு கொரோனா: திரையுலகம் அதிர்ச்சி!

தமிழ் திரை உலகின் நடிகர்களில் ஒருவரான விதார்த் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாக வெளி வந்திருக்கும் செய்தியை உலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
மைனா என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் நடிகர் விதார்த். இவர் நடித்து முடித்துள்ள கார்பன் என்ற திரைப்படம் பொங்கல் விருந்தாக வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நடிகர் விதார்த்தின் அம்மா அப்பா உள்பட 11 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளதாகவும் ஒரு சிலர் வீட்டில் தங்கியும் ஒரு சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
 
நடிகர் விதார்த் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்கு கொரோனா என்ற தகவல் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவர்கள் அனைவரும் விரைவில் குணமாக வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.