அஜித் குமார் நடித்து பெரும் எதிர்பார்ப்பில் உள்ள விடாமுயற்சி திரைப்படத்தின் எதிர்பார்க்கப்பட்ட பொங்கல் ரிலீஸ் தள்ளி போனதால் அஜித் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள விடாமுயற்சி படம், கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து படப்பிடிப்பில் இருந்து வருகிறது. அப்டேட்டாவது வராதா என ரசிகர்கள் காத்திருந்த விடாமுயற்சி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியான நிலையில் அது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்ந்து படம் பொங்கலுக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படம் ரிலீஸ் தள்ளி போவதாக அறிவித்துள்ளது லைகா தயாரிப்பு நிறுவனம். இதனால் அஜித் ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்த நிலையில் அவர்களை சர்ப்ரைஸ் செய்யும் விதமாக குட் பேட் அக்லி படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள இந்த படம் விடாமுயற்சிக்கு பின்னர் வெளியாவதற்காக தயார் செய்யப்பட்டு வரும் நிலையில் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸாவதாக சினிமா வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம் தற்போது விடாமுயற்சி பொங்கல் ரேஸில் இருந்து விலகிய நிலையில் பல படங்கள் தங்கள் ரிலீஸை பொங்கலுக்கு நகர்த்தி வருகின்றன.
Edit by Prasanth.K