1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 4 செப்டம்பர் 2021 (11:34 IST)

வெற்றி இயக்குனர் வெற்றிமாறனுக்கு இன்று பிறந்தநாள்!

தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குனரான வெற்றிமாறன் பொல்லாதவன் படத்தின் மூலம் மிகப்பெரிய புகழ் பெற்றார். இவரது இரண்டாவது திரைப்படமான ஆடுகளம் 2011ஆம் ஆண்டுக்கான தேசியத் திரைப்பட விருதுகளில் சிறந்த இயக்குநர் மற்றும் சிறந்த திரைக்கதையாசிரியர் விருதுகளைப் பெற்று பெருமை சேர்த்தது. இந்தத் திரைப்படத்திற்கு 6 தேசிய விருதுகள் கிடைத்துள்ளன.
 
மேலும் வடசென்னை , அசுரன் உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை தேடித்தந்தது. இந்நிலையில் இன்று தனது 46வது பிறந்தநாள் கொண்டாடும் வெற்றி மாறனுக்கு ரசிகர்கள், திரைத்துறை நண்பர்கள் உள்ளிட்ட பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.