1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 5 அக்டோபர் 2022 (15:41 IST)

விடுதலை முதல் பாகம் ரிலீஸ் எப்போது?... வெளியான லேட்டஸ்ட் தகவல்!

வெற்றிமாறன் இயக்கி வரும் விடுதலை திரைப்படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகிறது.

கடந்த ஆண்டே தொடங்கப்பட்ட விடுதலை இந்த படத்தை முதலில் சிறு பட்ஜெட்டில் குறுகிய காலத்தில் எடுத்து முடிப்பதாகவே திட்டமிடப்பட்டது. ஆனால் படத்தில் விஜய் சேதுபதி இணைந்ததும் படத்தின் பட்ஜெட் அதிகமாகி ஏராளமான நட்சத்திரங்களை நடிக்க வைத்தனர்.

ஆனால் அனைவரும் பிஸியான நடிகர்களாக இருப்பதால், அவர்களின் தேதிகளைப் பெறுவதில் சிக்கல் எழுந்தது. சமீபத்தில் கடைசி கட்ட ஷூட்டிங் தற்போது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காட்டுப் பகுதிகளில் நடந்தது. அதோடு மொத்தப் படப்பிடிப்பும் நிறைவடைந்ததாக சொல்லப்பட்டது.

இந்நிலையில் படம் இரண்டு பாகங்களாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாகம் வரும் டிசம்பர் 25 ஆம் தேதி ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும் இரண்டாம் பாகம் அடுத்த ஆண்டு கோடையில் ரிலீஸ் ஆகும் என சொல்லப்படுகிறது.