ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 27 மே 2020 (15:48 IST)

பாராசைட் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்குத் தகுதியானதா? இயக்குனர் வெற்றிமாறன் கருத்து!

இந்த ஆண்டு ஆஸ்கர் விருது பெற்ற தென்கொரிய திரைப்படமான பாராசைட் அந்த விருதுக்கு தகுதியானதா என்று இயக்குனர் வெற்றிமாறன் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் வரலாற்றிலேயே முதல் முறையாக அமெரிக்காவில் தயாரிக்கப்படாத ஒரு திரைப்படம், நான்கு பிரிவுகளில் ஆஸ்கர் விருது பெற்றது என்றால் அது இந்த ஆண்டு விருது பெற்ற பாராசைட் திரைப்படம்தான். முதலாளித்துவத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வுகளை பேசிய அந்த படம் உண்மையில் ஆஸ்கருக்குத் தகுதியானதுதானா என விவாதங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் அந்த திரைப்படம் உண்மையிலேயே ஆஸ்கருக்கு தகுதியானதுதானா என்ற கேள்வியை இயக்குனர் வெற்றிமாறனோடு நடந்த ஒரு உரையாடலில் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்தி கேட்டார். அதற்குப் பதிலளித்த வெற்றிமாறன் ‘அந்த திரைப்படம்  முதலாளித்துவ வாழ்க்கை முறையை கேள்வி கேட்கிறது. இந்த வாழ்க்கை முறையில் ஒரு சாதாரண மனிதன் எப்படி பாதிகின்றான் என்பதையும் ஏழை பணக்காரன் வித்தியாசத்தையும் தெளிவாக முன் வைக்கிறது. வெள்ளத்தால் இந்த ஏழைக் குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கும் போது பணக்கார பெண் அருமையான வானிலை என்று அதை கொண்டாடுகிறாள். தலாளித்துவத்தைக் கேள்வி கேட்கும் தன்மைதான் ஆஸ்கரில் இதற்குச் சாதகமாக இருந்தது என நான் நினைக்கிறேன். அமெரிக்கர்கள் இப்போது தங்களது வாழ்க்கை முறையைக் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இதனால் தார்மீக ரீதியில் அந்த  படம் தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம், மேலும். ஆஸ்கர் என்பது ஒரு நல்ல படத்துக்கான அளவுகோல் கிடையாது. வெற்றி பெற்ற வணிகப் படங்களில் இருக்கும் ஒரு ஒழுங்கான உணர்வுபூர்வமான படங்களைத்தான் அவர்கள் தேர்வு செய்கிறார்கள்.’ எனக் கூறியுள்ளார்.