1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 16 நவம்பர் 2023 (14:24 IST)

விஜய் சேதுபதியை இளமையாகக் காட்ட புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வெற்றிமாறன்!

இந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்துள்ளது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் திண்டுக்கல் மாவட்டம் சிறுமலை என்ற இடத்தில் தொடங்கி பின்னர் திருவள்ளூரில் நடைபெற்றது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதி மற்றும் மஞ்சு வாரியர் ஆகியோரின் காட்சிகள் படமாக்கப்பட்டு வரும் நிலையில் அவர்கள் இருவரையும் இளமையாகக் காட்ட டிஎஜிங் என்ற தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.