செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 26 பிப்ரவரி 2021 (15:10 IST)

நடிகரிடம் இருந்து மைக்கைப் பிடுங்கிய வெற்றிமாறன்… காரணம் இதுதானாம்!

தான் தயாரித்துள்ள சங்கத்தலைவன் படத்தின் விழா மேடை ஒன்றில் நடிகர் மாரிமுத்து பேச்சால் வெற்றிமாறன் மேடையை விட்டு கீழே இறங்கி சென்றுள்ளார்.

தமிழ் சினிமாவின் மிகச்சிறந்த தயாரிப்பாளர்களில் ஒருவரான வெற்றிமாறன் தயாரிப்பில் சமுத்திரகனி சங்கத்தலைவன் என்ற சமுதாய அக்கறைகொண்ட படத்தில் நடித்துள்ளார். சமூகத்தில் நடக்கும் அவலங்களை எதிர்த்து மிகச்சிறந்த தரமான படங்களை கொடுக்கும் சமுத்திர கனி ஹீரோவாக நடித்துள்ள சங்கத்தலைவன் படம் தொழிலாளர்களுக்காக முதலாளிகளை எதிர்த்து நியாயத்தை தேடும் படமாக உருவாகியுள்ளது. இந்த படம் இன்று தமிழகம் முழுவதும் திரையரங்கில் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகள் கடந்த சில நாட்களாக நடந்தன. அப்போது ஒரு நிகழ்ச்சியில் படத்தில் நடித்துள்ள வில்லன் நடிகர் மாரிமுத்து பேசும்போது தேவையில்லாததை பற்றி எல்லாம் பேசி மேடையில் உள்ளோரை முகம் சுளிக்க வைத்துள்ளார். இதனால் கடுப்பான வெற்றிமாறன் அவரை பேசவேண்டாம் என சொல்லிவிட்டு மேடையை விட்டே இறங்கிவிட்டாராம்.