திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 6 மே 2023 (14:59 IST)

“கஸ்டடி படத்தில் என் ஸ்டைல் இருக்காது…” வெங்கட் பிரபு ஓபன் டாக்!

பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சற்று முன் வெளியாகி உள்ளது. இந்த படத்திற்கு கஸ்டடி என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல கவனத்தை ஈர்த்தது. காவல்துறை அதிகாரியாக நாகசைதன்யா நடித்துள்ள இந்த படத்தில் நாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார் என்பதும் மேலும் முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தின் ஷூட்டிங்கை திட்டமிட்டபடி, குறுகிய காலத்தில் படமாக்கி முடித்தார் வெங்கட்பிரபு. இந்நிலையில் படம் மே மாதம் 12 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் படத்தில் இடம்பெற்றுள்ள டைம்லெஸ் லவ் என்ற பாடலின் லிரிக்கல் வீடியோ இப்போது வெளியாகி கவனம் பெற்றுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் ரிலீஸானது. அந்த நிகழ்வில் பேசிய வெங்கட்பிரபு “என் படங்களில் வழக்கமாக ஜாலியாக இருக்கும். ஆனால் இந்த படம் முழுவதும் ஆக்‌ஷன் மோடில் இருக்கும். என்னுடைய படங்களில் புது அனுபவமாக இருக்கும்” எனக் கூறியுள்ளார்.