விஜய் 68 பட அப்டேட் கேட்ட ரசிகருக்கு வெங்கட்பிரபுவின் பதில்..!
நடிகர் விஜய், லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக படத்தின் இயக்குனரான வெங்கட்பிரபு, விஜய் அமெரிக்காவில் கிராபிக்ஸ் ஸ்டுடியோ ஒன்றில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் அமெரிக்காவில் திரையரங்கில் படம் பார்க்கும் விஜய்யின் புகைப்படங்களை அடுத்தடுத்து வெளியிட்டு வந்தார்.
இதையடுத்து நேற்று ரசிகர் ஒருவர் வெங்கட்பிரபுவிடம் விஜய் 68 பட அப்டேட் கேட்க, “இன்னைக்கு ஞாயிற்றுக் கிழமை லீவ்” என ஜாலியாக பதிலளித்துள்ளார்.