திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 7 ஆகஸ்ட் 2021 (16:41 IST)

ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்… 15 ஆண்டுகளுக்கு முந்தைய நினைவைப் பகிர்ந்த இயக்குனர் வெங்கட்பிரபு!

இயக்குனர் வெங்கட்பிரபு சென்னை 28 படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

இயக்குனர் வெங்கட்பிரபு இன்று தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவர். நடிகராக ஒரு சில படங்களில் தலைகாட்டிய அவர் 2007 ஆம் ஆண்டு வெளியான சென்னை 28 படத்தின் பிரம்மாண்ட வெற்றியால் ஒரே நாளில் உலக பேமஸ் ஆனார். அதையடுத்து அவர் இயக்கிய சரோஜா, மங்காத்தா  ஆகிய படங்கள் அவரை முன்னணி இயக்குனர் ஆனார்.

இந்நிலையில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது முதல்நாள் இயக்குனர் அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார். தன்னுடைய டிவிட்டில் ‘ 15 வருடங்களுக்கு முன்பு இதே நாளிலதான் ‘ஸ்டார்ட் கேமரா, ஆக்‌ஷன்’ என்று சொன்னேன்.எனக்கு இதயத்தில் இடம் கொடுத்ததற்காக கடவுளுக்கும் மக்களுக்கும் என்றென்றும் நன்றி’ எனக் கூறியுள்ளார்.