வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Updated : புதன், 10 ஏப்ரல் 2024 (09:58 IST)

கோட் படத்தில் இயக்குனராக மட்டுமில்லை… இந்த வேலையும் செய்துள்ளாரா வெங்கட் பிரபு?

விஜய் தன்னுடைய அரசியல் கட்சியின் பெயரை அறிவித்துள்ளார். இன்னும் இரண்டு படங்களில் மட்டுமே நடிப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது அவர் நடித்து வரும் GOAT திரைப்படத்தின் மீது மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த படத்தில் அவரோடு பிரசாந்த்,பிரபுதேவா, மீனாட்சி சௌத்ரி, ஜெயராம் மற்றும் மோகன் ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, சித்தார்த்தா நுனி ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

இந்த படத்தின் ஷூட்டிங் பெரும்பகுதி நிறைவடைந்துள்ள நிலையில் இறுதிகட்ட ஷூட்டிங்குக்காக கேரளா மற்றும் ரஷ்யாவுக்கு படக்குழு செல்ல உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் மொத்த ஷூட்டிங்கும் முடிந்துவிடும் என சொல்லப்படுகிறது. தற்போது படக்குழு ஷூட்டுக்காக துபாய் சென்றுள்ளது.

இந்த படத்தின் சில காட்சிகள் சமீபத்தில் திருவனந்தபுரத்தில் படமாக்கப்பட்டன. அப்போது சில காட்சிகளில் இயக்குனர் வெங்கட்பிரபுவும் நடித்துள்ளார். கிரிக்கெட் மைதானத்தில் படமாக்கப்பட்ட அந்த காட்சியில் வெங்கட் பிரபு சிஎஸ் கே அணியின் ஜெர்ஸியை அணிந்திருக்கும் ரசிகராக நடித்துள்ளாராம்.