செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By bala
Last Updated : திங்கள், 5 ஜூன் 2017 (12:05 IST)

வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தது ஏன்? : வேலு பிரபாகரன் விளக்கம்

காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி போன்ற ‘ஏ’டாகூடமான படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். இவர் இயக்கத்தில் நேற்று வெளியான படம் ‘ஒரு இயக்குநரின் காதல் டைரி’. இவரே ஹீரோவாக நடித்த இந்தப் படத்தில், பொன். ஸ்வாதி  என்பவர் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்தப் படத்துக்கு இசையமைத்திருப்பவர், இளையராஜா.


 

இந்த நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று காதல் கதையில் நடித்த ஷெர்லி தாஸும், வேலு பிரபாகரனும்  மோதிரம் மாற்றித் திருமணம் செய்து கொண்டனர். வள்ளுவர் கோட்டம் பின்புறமுள்ள ‘லீ மேஜிக் லேண்டர்ன்’ பிரிவியூ  தியேட்டரில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இந்த திருமணம் நடைபெற்றது.

தன்னை விட 30 வயது குறைந்த பெண்ணை திருமணம் செய்தது குறித்து வேலு பிரபாகரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நம் நாட்டில் என் வயதுடையவரை யாரும் திருமணம் செய்ய மாட்டார்கள். எனது திருமணத்தின் மூலம் நிறைய கேள்வி எழத் தான் செய்யும். டொனால்ட் டிரம்ப் தனது 74வது வயதில் திருமணம் செய்தார். அவரது மனைவி குறைந்த வயதுடையவ்ர்தான். அனைத்து மனிதனுக்கும் ஆதரவு அல்லது துணை தேவை. ஷெர்லி எனக்கு துணையாக கிடைத்ததற்கு நான் அதிர்ஷ்டசாலி என்று கூறினார்.