வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 19 அக்டோபர் 2021 (16:36 IST)

60 ஆண்டுகளுக்கு ரீமிக்ஸ் ஆகும் சூப்பர்ஹிட் பாடம்!

60 ஆண்டுகளுக்கு முன்னர் சூப்பர் ஹிட்டான பாடல் ஒன்று ராகவா லாரன்ஸ் நடித்து வரும் ருத்ரன் என்ற படத்தில் இடம்பெற இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளது.
 
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கதிரேசன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ருத்ரன். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் கடந்த 1962-ஆம் ஆண்டு வெளியான வீரத்திருமகன் என்ற படத்தில் இடம்பெற்ற பாடாத பாட்டெல்லாம் பாட வந்தாள் என்ற பாடலின் ரீமிக்ஸ் இந்த படத்தில் இடம்பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது 
 
விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையில் பிபி ஸ்ரீநிவாஸ் - ஜானகி பாடிய இந்த பாடல் ரீமிக்ஸ் செய்யப்பட்டால் மீண்டும் சூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடலை ரீமிக்ஸ் செய்ய இருப்பவர் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது