வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (13:56 IST)

வீரப்பனின் இளைய மகள் நடிக்கும் மாவீரன் பிள்ளை… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

சந்தனக் கடத்தல் வீரப்பனின் இளைய மகள் விஜயலட்சுமி நடிப்பில் மாவீரன் பிள்ளை என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

2004 ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்டார் சந்தனக் கடத்தல் வீரப்பன். அவருக்கு இரண்டு விஜயதாரணி மற்றும் விஜயலட்சுமி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். மூத்த மகள் விஜயதாரணி பாஜகவில் இணைந்து பணியாற்றி வருகிறார். இளைய மகள் விஜயலட்சுமி தமிழக வாழ்வுரிமை கட்சியில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் விஜயலட்சுமி நடிப்பில் மாவீரன் பிள்ளை என்ற திரைப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகியுள்ளது. அதில் விஜயலட்சுமி வீரப்பனைப் போன்றே கையில் துப்பாக்கி மற்றும் சீருடை அணிந்து காணப்படுகிறார். இது வீரப்பனின் வாழ்க்கை வரலாறா அல்லது விஜயலட்சுமியின் வாழ்க்கை வரலாற்று படமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.