சர்ச்சையைக் கிளப்பிய யோகி பாபு நடிக்கும் ‘கஜானா’… ரி எண்ட்ரி கொடுக்கும் வேதிகா!
யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கும் படத்துக்கு கஜானா என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
நடிகர் யோகிபாபு தமிழில் இப்போது அதிக சம்பளம் வாங்கும் நகைச்சுவை நடிகராக இருக்கிறார். நகைச்சுவை நாயகனாகவும் சில படங்களில் படங்களில் நடித்து அந்த படங்கள் வெற்றியும் பெற்றன. கடைசியாக அவர் நடித்த மண்டேலா படம் ஓடிடியில் ரிலீஸாகி வெற்றி பெற்றது. அதையடுத்து இப்போது கஜானா என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை அறிமுக இயக்குனர் யாசின் இயக்குகிறார். அந்த படத்தின் போஸ்டர் இன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு முதலில் வீரப்பன் கஜானா என்று பெயர் வைக்கப்பட்டது.
ஆனால் வீரப்பனின் குடும்பத்தினர் எதிர்ப்புத் தெரிவித்ததால் பின்னர் அந்த பெயர் மாற்றப்பட்டு கஜானா என்று பெயர் வைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தில் இப்போது நடிகை வேதிகா ஒரு முக்கிய வேடத்தில் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. சில ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் நடிக்காமல் இருந்த வேதிகா இந்த படம் மூலம் ரி எண்ட்ரி கொடுக்க உள்ளார்.