1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வியாழன், 24 நவம்பர் 2022 (14:59 IST)

வாரிசு படத்தின் செகண்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது? கசிந்த தகவல்!

வாரிசு படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை லலித்குமார் பெற்றுள்ளார். இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய் நடித்து வரும் வாரிசு படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. விஜய்யுடன் ராஷ்மிகா மந்தனா, பிரபு, பிரகாஷ் ராஜ் மற்றும் ஜெயசுதா ஆகியோர் நடிப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்த படம் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரிலீஸ் ஆகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று தீபாவளியை முன்னிட்டு வெளியான போஸ்டரில் பொங்கல் ரிலீஸை படக்குழு உறுதி செய்துள்ளது. இந்நிலையில் வாரிசு படத்தின் தமிழ்நாடு விநியோக உரிமையை மாஸ்டர் தயாரிப்பாளர் லலித்குமார் கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘ரஞ்சிதமே ரஞ்சிதமே’ பாடல் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து படத்தின் இரண்டாவது சிங்கிள் பாடல் டிசம்பர் 2 ஆம் தேதி வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.