செவ்வாய், 6 ஜூன் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified செவ்வாய், 7 பிப்ரவரி 2023 (15:03 IST)

வாரிசு வசூல் 300 கோடி… உலக மகா உருட்டு என ட்ரோல் செய்த சினிமா பிரபலம்!

வாரிசு திரைப்படம் உலகம் முழுவதும் 300 கோடி ரூபாய் அளவுக்கு வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஜனவரி 11 ஆம் தேதி தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆன வாரிசு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. அதையடுத்து ஜனவரி 14 ஆம் தேதி தெலுங்கிலும் வெளியானது. உலகம் முழுவதும் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியான வாரிசு திரைப்படம், கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் பெரிய அளவில் சாதித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்து அறிவித்து வருகிறது.

இந்நிலையில் நேற்று வாரிசு திரைப்படம் உலகளவில் 300 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக அறிவித்தது. இந்த வசூல் கணக்கு விமர்சனங்களை சந்தித்து வரும் நிலையில் சினிமா விமர்சகரும் இயக்குனருமான ப்ளூ சட்ட மாறன் “300 கோடி உலக மகா உருட்டு” என ட்ரோல் செய்துள்ளார்.