செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: புதன், 4 அக்டோபர் 2017 (00:09 IST)

முருகதாசை பின்னுக்கு தள்ளிய கருப்பனும், கவுதம் கார்த்திக்கும்

கடந்த ஆயுத பூஜை தினத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய 'ஸ்பைடர்', விஜய்சேதுபதியின் 'கருப்பன் மற்றும் கவுதம் கார்த்திக்கின் 'ஹரஹர மகாதேவகி' ஆகிய படங்கள் வெளியானது. இந்த மூன்று படங்களில் அதிக வசூல் செய்த படம் 'ஸ்பைடர்; தான் என்றாலும் விநியோகிஸ்தர்களுக்கும், திரையரங்கு உரிமையாளர்களுக்கும் நல்ல லாபத்தை கொடுத்த படம் கருப்பன் மற்றும் ஹரஹரமகாதேவகி படங்கள் தான்'. அதேபோல் விமர்சன அளவிலும் 'ஸ்பைடரை விட மற்ற இரண்டு படங்களுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்துள்ளது.



 
 
'ஸ்பைடர்' திரைப்படம் தமிழகத்தில் கடந்த 6 நாட்களில் ரூ.16 கோடி வசூல் செய்துள்ளது. இந்த படத்தின் பட்ஜெட்டை ஒப்பிடும்போது இந்த வசூல் தொகை மிகவும் குறைவு
 
ஆனால் அதே நேரத்தில் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட விஜய்ய்சேதுபதியின் கருப்பன் திரைப்படம் கடந்த 4 நாட்களில் தமிழகத்தில் ரூ.10.5 கோடி வசூல் செய்துள்ளது. அதேபோல் கௌதம் கார்த்திக்கின் 'ஹரிஹரமகாதேவி' திரைப்படம் கடந்த மூன்று நாட்களில் தமிழகத்தில் ரூ.7 கோடி வசூல் செய்துள்ளது. இந்த இரண்டு படங்கள் தான் உண்மையான வியாபாரரீதியிலான வெற்றிப்படம் என்று கூறப்படுகிறது