1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Updated : வியாழன், 9 மார்ச் 2017 (17:13 IST)

விஷாலை கண்டுகொள்ளாத வரலட்சுமி

அருகருகே அமர்ந்தும் கூட விஷால் - வரலட்சுமி இருவரும் பேசிக் கொள்ளாததைப் பார்த்து திரையுலகம் ஆச்சரியப்பட்டுப்  போயிருக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்காக ‘சேவ் சக்தி’ என்ற அமைப்பைத் தொடங்கியிருக்கிறார் நடிகை வரலட்சுமி. இதற்கான பிரச்சாரம், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நடைபெற்றது.

 
விஷால், ஜெயம் ரவி, வெங்கட் பிரபு, சினேகா, பிரசன்னா, மிஷ்கின் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த கையெழுத்து இயக்கத்தில்  கலந்து கொண்டனர். 
 
விஷாலும், வரலட்சுமியும் பிரிந்துவிட்டதாக கூறப்படும் நிலையில், விஷாலின் வருகை அனைவரின் புருவத்தையும்  உயர்த்தியிருக்கிறது. ஆனால், இருவருமே ஒரு வார்த்தை கூட பேசிக்கொள்ளவில்லை என்கின்றனர் அங்கிருப்பவர்கள். நடுவில் ஜெயம் ரவியை உட்கார வைத்துவிட்டு, ஆளுக்கொரு பக்கமாகத் திரும்பி அமர்ந்திருந்தனர். 
 
விசாரித்துப் பார்த்தால், நடிகர் சங்கத் தலைவர் என்ற முறையில்தான் விஷால் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டாரே தவிர,  பர்சனலாக இல்லை என்கிறார்கள்.