1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: வியாழன், 17 டிசம்பர் 2020 (13:26 IST)

இதெல்லாம் ஒரு பொழப்பா...? பீட்டர் பாலை துரத்திய வேகத்திலே அடுத்த காதல்!

தமிழ் சினிமா நடிகையும் பிக்பாஸ் பிரபலமான நடிகை வனிதா விஜயகுமார் பீட்டர் பால் என்பவரை 3 வதாக திருமணம் செய்து கொண்டார். பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி ஒரு பிள்ளை இருப்பதும் தெரியவந்தது. பின்னர் பீட்டர் பால் தனது மனைவியை விவகாரத்து செய்யாமலேயே வனிதாவை திருமணம் செய்துகொண்டது சர்ச்சையானது.
 
இதுகுறித்து டிஜிட்டல் மற்றும் யுடியூப்களில் விவாதிக்கப்பட்டு ஏகப்பட்ட பஞ்சாயத்து ஆகி போலீஸில் புகார் அளிக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.பின்னர் அண்மையில் தனது பிறந்தநாளைக்கொண்டாட குடும்பத்தினருடன் வனிதா கோவாவுக்கு சென்றார். அங்கு கணவருடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டார்.
 
அப்போது கோவாவில் பீட்டர் பால் நன்றாகக் குடித்துவிட்டு வனிதாவிடம் ரவுசு விட்டுள்ளார். இதனால் கடுப்பான வனிதா பீட்டரை அடித்து அவருடனான தனது திருமண உறவை அங்கேயே முறித்துக்கொண்டதாக தகவல் வெளியாகியது. பின்னர் வனிதா அவருடன் வாழ முயற்சித்ததாகவும் ஆனால், பீட்டர் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை என செய்திகள் வெளியாகியது. 
 
இந்நிலையில் தற்போது பீட்டர் பாலை பிரிந்த சில மாதங்களிலே வனிதா அடுத்த காதலில் விழுந்துள்ளார். ஆம் இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்  ’மீண்டும் காதல், இப்போது சந்தோஷமா? என பதிவிட்டு அந்த பதிவில் உமா ரியாஸை டேக் செய்துள்ளார். பெரும் சர்ச்சைக்குள்ளாகும் இந்த பதிவில் அவர் கமெண்ட் செக்ஷனை ஆஃப் செய்துள்ளது இன்னும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. யார் அந்த அஞ்சாவது புருஷன்? என நெட்டிசன்ஸ் கிண்டலடித்து வருகின்றனர்.