1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 3 ஜூலை 2021 (08:03 IST)

அவமானப்படுத்திய ரம்யா கிருஷ்ணன்- பிபி ஜோடியில் இருந்து விலகிய வனிதா அறிக்கை!

சர்ச்சைகளுக்கு குறைவில்லாமல் நடந்துக்கொள்ளும் வனிதா அதன் மூலம் பெரிய அளவில் பிரபலமாகிவிட்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியை சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்ட வனிதா அதன் பின்னர் திருமண சர்ச்சையில் சிக்கினார். 
 
தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் சுரேஷ் சக்கரவர்த்திக்கு ஜோடியாக நடனமாடிக்கொண்டிருந்தார். இந்நிலையில் அந்நிகழ்ச்சியில் சீனியர் பெண் ஒருவர் தனது சொந்த விஷயங்களை குறித்து கேலி செய்யப்படுவதாக அதனால் அந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில், " வேலை செய்யும் இடத்தில் தொழில் முறையில்லாத நெறி முறையற்ற நடத்தை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆணவத்தால் என் வளர்ச்சியை தாங்க முடியாத ஒருவர் எனக்கு தொல்லை கொடுத்து அவமானப்படுத்தி மோசமாக நடத்தினார். பணியிடங்களில்  ஆண்கள் மட்டும் பெண்களை மோசமாக நடத்துவதில்லை, பெண்களும் பொறாமை கொண்டு மோசமாக நடத்துகிறார்கள். ஒரு பெண் தான் இன்னொரு பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். ஆனால் , அவர்கள் கடந்து வந்த பாதையை மறந்து விட்டு வயதில் மூத்தவர்கள் உழைத்து முன்னேறும் இளைஞர்களை அவமானப்படுத்துவதாக அறிக்கை வெளியிட்டுள்ளார். 
 
அது நிச்சயம் ரம்யா கிருஷ்ணன் தான் எங்களுக்கு நன்றாக தெரியும். உங்களது முடிவு சிறந்தது என வனிதாவுக்கு பலரும் ஆதரவு கமெண்ட் செய்துள்ளனர்.