திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (23:14 IST)

விஜய் நண்பருடன் வனிதா செல்ஃபி... என்ன உறவு முறை தெரியுமா/

சில ஆண்டுகளுக்கு முன் நடிகர் விஜய்யுடன் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் வனிதா. பின்னர் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவராகக் கலந்துகொண்டார். இதன் மூலம் தமிழக மக்களின் அதிக நெருக்கமானார்.

இவர் கடந்தாண்டு 3 வதாக பீட்டர் என்பவரை திருமணம் செய்து கொண்டது பெரும் சர்ச்சையானது. இதையடுத்து 4 வது திருமணம் குறித்த வதந்திகள் வந்தபோதும் அதற்கு வனிதா தெளிவான விளக்கம் கொடுத்தார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு திருமண விழாவிற்குs சென்ற வனிதா அங்கு, நடிகர்  விஜய்யின் நண்பரும், நடிகருமான சஞ்சயுடன் இணைந்து செல்பி எடுத்துக் கொண்டார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நடிகர் சஞ்சீவ் எனது சகோதரரர் எனக் குறிப்பிட்டு உள்ளார்.

மேலும், தனது தயார் மஞ்சுளாவின் சகோதரி ஷ்யாமளா மகன் தான் சஞ்சீவ் எனக் கூறியுள்ளார். இவர்கள் இருவரும் உறவுமுறை என்பது பலரும் அறியாததாகும்.