1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : திங்கள், 7 பிப்ரவரி 2022 (15:01 IST)

கவர்ச்சி கூட அழகாய் காட்ட உங்களால் தான் முடியும் - சேலையில் வசீகரிக்கும் வாணி போஜன்!

மாடல் அழகியான நடிகை வாணி போஜன் ஆரம்பத்தில் சீரியல்களில் நடித்து இல்லத்தரசிகளின் மனதில் ஆழமான இடத்தை பிடித்துவிட்டார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆன இவர் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தெய்வமகள் தொடரில் நடித்து புகழ் பெற்றார். 
 
அதற்கு முன்னரே நிறைய விளம்பர படங்களில் நடித்திருக்கிறார். அதையடுத்து திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு அவரை தேடி வந்தது. அசோக் செல்வனுடன் ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து புகழ் பெற்றார். தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்திருக்கிறார். 
 
இந்நிலையில் தற்போது ஸ்லீவ்லெஸ் சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்த புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் ரசனையில் மூழ்கியுள்ளார். கவர்ச்சி கூட அழகாய் தெரியுது என ரசிகர்கள் வர்ணித்து தள்ளியுள்ளனர்.