வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By mahendran
Last Modified: புதன், 6 அக்டோபர் 2021 (12:17 IST)

நயன்தாரா தயாரிப்பில் குட்டி நயன்தாரா வாணிபோஜன்!

நடிகை வாணி போஜன் சீரியலில் இருந்து திரைக்கு வந்து கதாநாயகியாக கலக்கிக் கொண்டு இருக்கிறார்.

ஒரு காலத்தில் சீரியலில் நடிக்கும் நடிகைகளை சினிமாவில் நடிக்க வைக்க யோசிப்பார்கள் . அப்படியே நடித்தாலும் அண்ணி தங்கை வேடங்கள் மட்டுமே கொடுப்பார்கள். அதை முதலில் உடைத்தவர் பிரியா பவானி சங்கர். சீரியலில் இருந்து சினிமாவுக்கு சென்று வெற்றிகரமான கதாநாயகியாக வலம் வருகிறார்.

அவருக்குப் பிறகு சின்னத்திரை நயன்தாரா என்று சீரியல் ரசிகர்களால் அழைக்கப்பட்டு பெரும் பிரபலமடைந்தவர் நடிகை வாணி போஜன். ஆரம்பத்தில் விமான பணிப் பெண்ணாக இருந்து பின்னர் மாடலிங் திரையில் நுழைந்தார். அதன் மூலம் கிடைத்த வாய்ப்பில் தான் சீரியல் நடிகையானார்.  சன் டிவியில் ஒளிபரப்பான " தெய்வமகள் " சீரியலில் நடித்து குறுகிய காலத்தில் குடும்ப ரசிகர்களிடையே படு பேமஸ் ஆகிவிட்டார். அதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் நுழைய அம்மணிக்கு வாய்ப்பு கிடைத்தது. அசோக் செல்வன் நடித்த  ‘ஓ மை கடவுளே’ படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்து ரசிகர்களின் மனதில் மீரா அக்காவாக நுழைந்துவிட்டார்.

அதையடுத்து அவருக்கு பல பட வாய்ப்புகள் வந்தவண்ணம் உள்ளன. இந்நிலையில் வாணி போஜன் அடுத்து நயன்தாரா தனது ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் கவின் நாயகனாக நடிக்க உள்ளார் என்று சொல்லப்படுகிறது.