வியாழன், 28 மார்ச் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 4 ஜூலை 2022 (10:48 IST)

“லெஜண்ட் கமல் … உங்கள் நடிப்பு பற்றி பேச எனக்கு தகுதி…” விக்ரம் பார்த்த மகேஷ் பாபு சிலாகிப்பு!

விக்ரம் திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரையுலகைச் சேர்ந்தவர்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய்சேதுபதி மற்றும் பஹக் பாசில் ஆகியோர் நடித்துள்ள படம் விக்ரம், இந்த படத்தில் சூர்யா ஒரு முக்கிய தோற்றத்தில் சில நிமிடங்கள் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ள விக்ரம் திரைப்படம் ஜூன் 3 ஆம் தேதி இந்த படம் வெளியான நிலையில் ரசிகர்களிடையே நல்ல பாசிட்டிவான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இதுவரை தமிழ் படங்கள் படைத்த பல வசூல் சாதனைகளை இந்த திரைப்படம் முறியடித்துள்ளது. கிட்டத்தட்ட திரையரங்குகள் மூலமாக 450 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என தகவல்கள் வெளியாகின்றன.

படம் ரிலீஸாகி ஒரு மாதம் கழித்து படத்தைப் பார்த்துள்ள தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு, தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் “ விக்ரம் ப்ளாக்பஸ்டர். நவீன கால கல்ட் கிளாசிக். லோகேஷுடன் விக்ரம் படத்தின் ஒட்டுமொத்த செயல்முறை குறித்து விவாதிக்க விரும்புகிறேன். லெஜண்ட் கமல்ஹாசன் அவர்களின் நடிப்பு பற்றி கருத்து சொல்ல எனக்கு தகுதியில்லை. உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு, இது பெருமையான தருணம். ” என சிலாகித்து பேசியுள்ளார்.