1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 20 செப்டம்பர் 2021 (15:32 IST)

விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்… தளபதி 66 இயக்குனர் அப்டேட்!

இயக்குனர் வம்சி அடுத்து தான் இயக்கும் படத்தை பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகிவரும் திரைப்படத்தில் தளபதி விஜய் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படம் குறித்த தகவல் கடந்த சில நாட்களாக இணையதளங்களில் வைரலாகி வந்தது என்பது தெரிந்ததே. விஜய்யின் அடுத்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடிபல்லி இயக்க இருப்பதாகவும் அந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது. ஆனால் அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியாக வில்லை.

இந்நிலையில் இந்த படத்தின் பூஜை ஆயுத பூஜை அன்று நடக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் விழா ஒன்றில் கலந்துகொண்ட வம்சியிடம் உங்களின் அடுத்த படம் என்ன என்று கேட்கப்பட்டது. அதற்கு வம்சி ‘கண்டிப்பாக எல்லாருக்கும் தெரிந்த படம்தான். விரைவில் அறிவிப்புகள் வெளியாகும்’ என மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.