வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 17 ஜனவரி 2023 (10:11 IST)

’தளபதி 67’ படத்தில் ஜனனி.. விஜய்யின் தங்கை கேரக்டரா?

thalapathi
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. 
 
முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்த நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற இருப்பதாகவும் இதனை அடுத்து காஷ்மீர் படப்பிடிப்பிற்கான ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலை இந்த படத்தில் ஏற்கனவே பல பிரபலங்கள் இணைந்துள்ள நிலையில் தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான ஜனனி இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இது குறித்து அறிவிப்பு விரைவில் அதிகாரம் பூர்வமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
ஆக்சன் கிங் அர்ஜுன், சஞ்சய்தத், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் மேனன், த்ரிஷா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது ஜனனியும் இணைந்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva