1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 31 டிசம்பர் 2020 (15:46 IST)

#Valimaiதிருவிழாஆரம்பம்... அஜித் ரசிகர்கள் உற்சாகம்! ட்ரெண்டாகும் ஹேஸ்டேக்

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இந்த படத்தின் அப்டேட் கடந்த ஒரு வருடமாக வெளிவராததால் அஜித் ரசிகர்களை அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் வலிமைப் படப்பிடிப்பிலிருந்து ஒரு புகைப்படம் வெளியாகியுள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சி ஆடைந்துள்ளனர். இதைப் புத்தாண்டு விருந்தாகக் கொண்டாடிவருகின்றனர்.

வலிமை படத்தின் அப்டேட் வேண்டும் என்றும் தொடர்ச்சியாக அஜித் ரசிகர்கள் வேண்டுகோள் விடுத்துக் கொண்டிருக்கும் நிலையில் சமீபத்தில் தகுந்த நேரத்தில் வலிமை படத்தின் அப்டேட் வரும் என அஜீத்தின் மேனேஜர் தனது டுவிட்டரில் குறிப்பிட்டிருந்தார்.

இருப்பினும் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை படத்தின் அப்டேட்களை போனிகபூர் வெளியிட வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். மதுரை உள்ளிட்ட பகுதியில் போஸ்டர் ஒட்டி தங்கள் எதிர்ப்பார்ப்பைத் தெரிவித்தனர். இந்த நிலையில் திடீரென வலிமை படத்தில் உள்ள ஒரு போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது

அஜித் மற்றும் அந்த படத்தில் நடித்த முக்கிய நடிகர்கள் இருக்கும் இந்த புகைப்படம் வைரலாகி வருவதை அடுத்து இந்த புத்தாண்டுக்கு இந்த ஒரு புகைப்படம் போதும் என்று அஜித் ரசிகர்கள் அதிருப்தி அடைந்து வருகின்றனர்

இந்நிலையில் #வரும் புத்தாண்டுப் பண்டிகைக்கு வலிமை அப்டேட் வெளிவர வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்ற அதேவேளையில் #Valimaiதிருவிழாஆரம்பம் என்ற ஹேஸ்டேக் உருவாக்கி டுவிட்டரில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
அடுத்தவருடம் வெளியாகவுள்ள மிகவும் எதிர்ப்பார்க்கப்படும் படங்களில் அஜித்குமாரின் வலிமை படமும் ஒன்றாகும்.