1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 22 மார்ச் 2022 (09:28 IST)

அஜித் ஷாலினி ரொமாண்டிக் போட்டோ… இணையத்தில் வைரல் ஹிட்!

அஜித் மற்றும் ஷாலினி புகைப்படத்தை ஷாம்லி தன்னுடைய சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அஜித் மற்றும் ஷாலினி ஆகிய இருவரும் அமர்க்களம் படத்தில் நடித்த போது காதல் வயப்பட்டு திருமணம் செய்துகொண்டனர். அதன் பிறகு ஷாலினி சினிமாவில் இருந்து விலகி பேட்மிண்ட்டன் விளையாட்டில் கவனம் செலுத்தினார். இந்த தம்பதிகளுக்கு அனோஸ்கா மற்றும் ஆத்விக் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர்.

இந்நிலையில் அவர்கள் திருமணம் ஆகி 23 ஆண்டுகள் கடந்துள்ளதை அடுத்து இப்போது ஒரு புதிய புகைப்படத்தை ஷாம்லி சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அஜித் ஷாலினியின் ரொமாண்டிக்கான அந்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.