1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sasikala
Last Modified: சனி, 22 ஏப்ரல் 2017 (16:22 IST)

வைரமுத்து 'ஜெட்லி' பாடல்கள் வெளியீட்டில் சொன்ன ரகசியம்!

ஜெட்லி திரைப்பட ஆடியோ வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இதில் கவிஞர் வைரமுத்து, தயாரிப்பாளர் தாணு, வைரமுத்து, இசையமைப்பாளர் சந்தோஷ்நாராயணன், சத்யா உள்பட பலர் கலந்துகொண்டர்.

 
ஜெகன் சாய் என்பவர் இப்படத்தை இயக்கியிருக்கிறார். ஶ்ரீசிவாஜி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. படத்தின் இயக்குநர்  சாய் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். சத்யா இசையமைக்க, கவிஞர் வைரமுத்து அனைத்துப் பாடல்களையும்  எழுதியுள்ளார். 
 
இசைவெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, ''சினிமாவில் இருக்கும் அனைத்து நண்பர்களும் என் மீது அன்பாக இருக்க  காரணம் நான் சினிமாவில் இருக்கிறேனே ஒழிய சினிமாவுக்குள் இல்லை. சினிமாவை விட்டு விலகி இருக்கிறேன். விலகி இருக்கும்போதுதான் நேசமும் மரியாதையும் குறையாமல் இருக்கிறது என்று கூறியுள்ளார்.