1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 23 செப்டம்பர் 2022 (07:34 IST)

நடிகர் போண்டாமணிக்கு என்னால் இயன்ற உதவியை செய்வேன்: நடிகர் வடிவேலு

bondamani
காமெடி நடிகர் போண்டாமணி கடந்த சில நாட்களாக இரு சிறுநீரகங்களும் செயலிழந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உதவி செய்ய வேண்டும் என சக நடிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். 
 
இந்த நிலையில் சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியம் அவர்கள் போண்டா மணியை நேரில் சந்தித்து அவருடைய சிகிச்சை செலவு முழுவதையும் தமிழக அரசு ஏற்கும் என்று தெரிவித்தார். 
 
இந்த நிலையில் வடிவேலுவுடன் பல படங்களில் நடித்துள்ள போண்டாமணிக்கு வடிவேலு உதவி செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்தவகையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த வடிவேலு போண்டா மணிக்கு என்னால் முடிந்த உதவியை கண்டிப்பாக செய்வேன் என்று கூறியுள்ளார்.
 
மேலும் தற்போது தான் நடித்துவரும் மாமன்னன், நாய் சேகர் ரிட்டன், சந்திரமுகி 2 ஆகிய படங்களில் மக்கள் எதிர்பார்ப்பதை விட அதிகம் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்