1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 29 மார்ச் 2021 (11:10 IST)

எண்டு கார்டா போடுறீங்க..? நாய் சேகராக ரீ எண்ட்ரி கொடுக்கும் வடிவேலு!?

தமிழ் சினிமாவின் முக்கிய காமெடி நடிகரான வடிவேலு நீண்ட காலம் கழித்து மீண்டும் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் 80கள் முதலாக மிகப்பெரும் காமெடி நடிகராக திகழ்பவர் வடிவேலு. இம்சை அரசன் 23ம் புலிகேசி, எலி உள்ளிட்ட படங்களில் ஹீரோவாகவும் நடித்து புகழ்பெற்ற வடிவேலு சில காரணங்களால் கடந்த சில வருடங்களாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்தார்.

இந்நிலையில் தற்போது மீண்டும் ஹீரோவாக ஒரு காமெடி படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தலைநகரம், மருதமலை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் சுராஜ் இந்த படத்தை இயக்கப்போவதாக கூறப்படுகிறது. மேலும் சுராஜ் இயக்கத்தில் வெளியான தலைநகரத்தில் வடிவேலுவின் “நாய் சேகர்” கதாபாத்திரம் பிரபலமான நிலையில், தற்போது இயக்க போகும் படத்திற்கு “நாய் சேகர்” என பெயரிட உள்ளதாக பேசிக் கொள்ளப்படுகிறது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என பேசிக்கொள்ளப்படுகிறது.