1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 12 அக்டோபர் 2021 (16:57 IST)

நாய் சேகர் படத்தின் கதை இதுதானா… அப்போ இந்த தலைப்பு சரியாதான் இருக்கும்!

வடிவேலு நடிக்கும் புதிய படத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு மிக விரைவில் தொடங்க உள்ள நிலையில் இந்த படத்தின் டைட்டிலுடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியாகி உள்ளது.

இந்த படத்திற்கு ’நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்க முடிவு செய்யப்பட்ட நிலையில் ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் சதீஷ் நடிக்கும் படத்திற்கு ’நாய் சேகர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டதால் தற்போது வடிவேலு படத்திற்கு நாய் சேகர் ரிட்டன்ஸ் என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அந்த படத்தின் கதைப் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. பணக்காரர்கள் தங்கள் வீடுகளில் செல்லமாக வளர்க்கும் நாய்களை திருடி அதை அவர்களிடமே பேரம் பேசி மீண்டும் விற்கும் கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கிறாராம். அதை உறுதி செய்வது போலவே படத்தின் போஸ்டரும் அமைந்திருந்தது.