செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (10:30 IST)

தனுஷின் அடுத்த படத்தின் டைட்டில் அறிவிப்பு!

தனுஷ் நடிக்கும் அடுத்த திரைப்படத்தின் டைட்டில் போஸ்டர் இன்று வெளியாகும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன்னர் தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் வெளியான வீடியோவில் இந்த படத்தின் டைட்டில் வீடியோ வெளியாகி உள்ளது
 
இந்த படத்திற்கு ‘வாத்தி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படம் முதல் முறையாக நேரடியாக தெலுங்கில் தயாரிக்கப்பட உள்ள நிலையில் தெலுங்கில் ‘சார்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் இந்த படத்தை வெங்கி அட்லுரி என்பவர் இயக்க இருக்கிறார் என்பதும் ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவில் நவீன் நூலி படத்தொகுப்பில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.