1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 7 ஜூலை 2023 (07:50 IST)

வ கௌதமன் இயக்கும் படத்தின் டைட்டில் மாற்றம்… !

இயக்குனர் வ கௌதமன் முரளி நடிப்பில் உருவான கனவே கலையாதே திரைப்படத்தின் மூலம் இயக்குனர் ஆக அறிமுகம் ஆனவர். அதன் பின்னர் பல ஆண்டு இடைவெளிக்குப் பிறகு மகிழ்ச்சி என்ற படத்தை இயக்கினார். அவர் இயக்கிய படங்கள் பெரிதாக ஹிட்டாகவில்லை என்றாலும், அரசியலில் பரபரப்பாக கருத்துகளை தெரிவித்து பிரபலம் ஆனார்.

இந்நிலையில் தற்போது அவரே ஹீரோவாக நடித்து மாவீரா என்ற படத்தை இயக்கி வருகிறார் சமுத்திரக்கனி, ராதாரவி, மன்சூர் அலிகான், பாகுபலி பிரபாகர், கிங்ஸ்லீ, ஆடுகளம் நரேன், இளவரசு, தீனா, சரண்யா பொன்வண்ணன் ஆகியோர் நடிக்கின்றனர். ஜி வி பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்துக்கு வைரமுத்து பாடல்களை எழுதுகிறார்.

நெய்வேலி மற்றும் பன்ரூட்டியில் முதல் கட்ட ஷூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் இப்போது மாவீரா என்ற தலைப்பை மாவீரா படையாண்டவன் என மாற்றியுள்ளனர் படக்குழு.