1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Updated : புதன், 20 அக்டோபர் 2021 (20:30 IST)

முதல்வர் வீடு முன்பு உண்ணாவிரதம் இருப்பேன்- சிம்புவின் தாயார் ஆவேசம்

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன் என டி ராஜேந்தர் மனைவியும் சிம்புவின் தாயாருமான உஷா ராஜேந்தர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
சிம்பு நடித்த மாநாடு திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த தேதியில் ரிலீஸ் ஆகுமா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது 
 
சிம்பு ஏற்கனவே நடித்த சில படங்களின் தோல்வி அவரது மாநாடு படத்திற்கு பெரும் சிக்கலாக உள்ளது என்பதும்ம் இது குறித்து பஞ்சாயத்து தற்போது நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது
 
இந்த நிலையில் சிம்புவின் மாநாடு படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்தால் முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன் என டி ராஜேந்தரின் மனைவி உஷா ராஜேந்தர் அவர்கள் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் இந்த பிரச்சனையை சரி செய்ய தயாரிப்பாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கூறப்படுகிறது