திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 18 அக்டோபர் 2021 (12:47 IST)

தீபாவளிக்கு மாநாடு ரிலீஸ் இல்லை! – சுரேஷ் காமாட்சி அறிவிப்பு!

சிம்பு நடித்த மாநாடு படம் தீபாவளிக்கு வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் ரிலீஸை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்து ரிலீஸுக்கு தயாராக உள்ள படம் மாநாடு. சயின்ஸ் பிக்‌ஷன் டைம் லூப் கான்செப்ட் படமான இந்த படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

பல்வேறு பிரச்சினைகளுக்கு பிறகு படம் முழுவதும் தயாராகியுள்ள நிலையில் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தீபாவளியை டார்கெட் செய்து ரஜினிகாந்த் நடித்த அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களும் வெளியாகின்றன.

இந்நிலையில் தற்போது திடீர் அறிவிப்பு வெளியிட்டுள்ள தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி “நீடித்த பெரும் வருடங்களின் உழைப்பிற்கு பிறகு அறுவடைக்கு காத்திருக்கிறான் மாநாடு. யாரோடும் போட்டி என்பதல்ல. ஒரு விழா நாளில் மக்கள் பல படங்களையும் பார்ப்பார்கள் என்பதாலேயே தீபாவளிக்கு வெளியிட முடிவெடுத்தோம்.

மாநாடு நன்றாக வந்துள்ளது. நிச்சயம் வெற்றியடையும். ஆனால் எந்த விதத்திலும் மாநாடு படத்தின் விநியோகஸ்தர்கள், திரையரங்குகள் நஷ்டமடைய கூடாது என்பதை கருத்தில் கொண்டு மாநாடு தீபாவளிக்கு ரிலீஸாவது ஒத்திவைக்கப்படுகிறது. நவம்பர் 25ம் தேதி படம் வெளியாகும்” என தெரிவித்துள்ளார்.