1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 24 மே 2021 (13:22 IST)

அண்ணாச்சி ஹீரோயினுக்கு இம்புட்டு சம்பளமா? கோட்டைவிட்ட கோலிவுட் நடிகைகள் வருத்தம்!

தமிழகத்தில் உள்ள பிரபல கடைகளில் ஒன்று சரவணா ஸ்டோர்ஸ். இன்று பல கிளைகளைப் பரப்பி பிரமாண்டமாகக் காட்சி தருகின்றது. அதன் புதிய விளம்பரங்கள் வெளியானால் டாப் ஹீரோவின் படம் போன்று சமூகவலைத்தளங்கள் முழுக்க ட்ரோல் செய்யப்பட்டு வைரலாக பேசப்படும். 
 
தமிழ் சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற தனது கனவை நிறைவேற்ற அண்ணாச்சி பல நாட்களாக துடித்துக்கொண்டிருந்தார். அதற்காக ஹன்சிகா, தமன்னா என கோலிவுட் நடிகைகளுக்கு கோடிகளை கொட்டி தருகிறேன் என்னுடன் ஜோடியா நடிங்க என கூறியும் யாரும் சட்டைபண்ணல. 
 
பின்னர் பாலிவுட்டின் கிளாமர் நடிகையாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஊர்வசி ராவ்டேலாவை ஓகே செய்தனர். அண்ணாச்சி அவருடன் ரொமான்ஸ் செய்த சில புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இந்நிலையில் இந்த படத்தில் நடிக்க ரூ. 2 கோடி சம்பளம் வாங்கினாராம் ஊர்வசி ராவ்டேலா. இதை கேட்டதும் வாய்ப்பை தவறவிட்ட நம்ம ஊரு நடிகைகள் சோகத்தில் மூழ்கிவிட்டனராம்.