திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 15 டிசம்பர் 2023 (12:55 IST)

5 நிமிடங்களுக்கு ஒரு சண்டை.. ’ஃபைட்கிளப்’ படத்தின் கலவையான விமர்சனங்கள்..!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படமான ’ஃபைட்கிளப்’ இன்று வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பதிவு செய்யப்பட்டு வருகின்றன
 
 ஐந்து நிமிடத்திற்கு ஒரு சண்டை இருப்பதாகவும் சண்டை காட்சி நன்றாக இருந்தாலும் சலிப்படைய வைப்பதாகவும் படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில்  கோவிந்த் வசந்தா பின்னணியில் பட்டையை கிளப்பியிருப்பதாகவும் படத்திற்கு இதுதான் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் என்றும் கூறியுள்ளனர்.  
 
உறியடி விஜயகுமாரின் நடிப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது என்றும் அவரே இந்த படத்தில் வசனமும் எழுதி உள்ளதை அடுத்து வசனங்கள்  அனல் தெறிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.  முழுக்க முழுக்க அதிரடி ஆக்சன் படமான இந்த படத்தில் ஒரு சமூக கருத்தையும் இயக்குனர் அப்பாஸ் தெரிவித்துள்ளார் என்றும் இந்த படம் ஏ சான்றிதழ் பெற்ற படமாக இருந்தாலும் அனைவரும் பார்க்க வேண்டிய ஒரு சமூக கருத்துள்ள படம் என்றும் தெரிவித்து வருகின்றனர் 
 
அதே நேரத்தில் திரைக்கதை மிகவும் வீக்காக இருப்பதாகவும் காட்சி அமைப்புகள் சரியில்லை என்றும் சிலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மொத்தத்தில் இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றுள்ளது
 
Edited by Mahendran