செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வியாழன், 17 ஆகஸ்ட் 2017 (00:59 IST)

நாளை தயாரிப்பாளர் சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம்

தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக விஷால் பதவியேற்றது முதலே பல அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் நிலையில் நாளை முக்கிய முடிவுகளை எடுக்க அவசர ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு அனைத்து தயாரிப்பாளர்களும் கலந்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



 
 
இதுகுறித்த செய்திக்குறிப்பு ஒன்று கூறுவதாவது: திரைப்பட முதலாளிகளுக்கு வணக்கம். தமிழ் சினிமாவின் நலன் கருதியும், தமிழ் திரைப்பட முதலாளிகள் நலன் கருதியும் தயாரிப்பாளர்கள் சங்கம் எடுக்கின்ற அதிரடியான முடிவுகள் அனைத்தும் முதலாளிகள் அனைவரும் அறிந்ததே
 
அதனடிப்படையில் தற்போது தமிழ் திரைப்பட துறையில் நிலவி வரும் பல பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டியிருப்பதால், நமது சங்கம் சார்பில் ஒரு அவசர ஆலோசனை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலாளிகள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டியது கட்டாயமாகிறது.
 
எனவே நாம் அனைவரும் ஒன்றுகூடி முடிவெடுக்க வேண்டியிருப்பதால் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்