வியாழன், 16 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 31 மே 2022 (21:38 IST)

இந்தியில் மட்டும் ‘ஒன்றியம்’ இல்லையா? கமலுக்கு நெட்டிசன்கள் கேள்வி

vikram
கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படம் ஜூன் மூன்றாம் தேதி வெளியாக உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே 
 
இந்நிலையில் இந்த படத்தின் பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் அதில் ஒன்றியம் வார்த்தை இருந்ததற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது 
 
ஆனால் அதே நேரத்தில் இந்த ஒன்றியம் என்ற வார்த்தை ஹிந்தி வெர்ஷனில் இல்லை என்று கூறப்படுகிறது
 
தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் மட்டுமே ஒன்றியம்  வார்த்தை இருப்பதாகவும் ஹிந்தியில் வேறு வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
 ஹிந்தியில் பிரதமர் மோடிக்கும் பாஜகவுக்கும் மிகப்பெரிய செல்வாக்கு இருப்பதால் ஆளுங்கட்சிக்கு எதிரான வார்த்தைகள் வேண்டாம் என்பதால் கமல் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதனை அடுத்து கமலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது