1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: வெள்ளி, 30 ஜூன் 2017 (20:58 IST)

அடடா...தம்பிராமையா மகன் வாழ்க்கையில் விதி இப்படி விளையாடிருச்சே!

பிரபல நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகர் தம்பி ராமையவின் மகன் உமாபதி அறிமுகமாகும் முதல் படம் 'அதாகப்பட்டது மகாஜனங்களே'. இந்த படம் இன்று வெளியாகி நல்ல ரிசல்ட்டும் பெற்றுள்ளது. காமெடி மற்றும் நடனத்தில் உமாபதி கலக்கியிருப்பதாக விமர்சனங்கள் வெளிவந்துள்ளதால் இந்த படம் நல்ல வசூலை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



 
 
ஆனால் திடீரென ஜிஎஸ்டி வரிவிதிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திங்கள் முதல் காலவரையற்ற திரையரங்குகள் மூடல் என்ற அறிவிப்பினை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இதனால் உமாபதி மற்றும் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கண்டிப்பாக இரண்டு வாரங்கள் இந்த படம் ஓடி நல்ல வசூலை தரும் என்று எதிர்பார்த்த நிலையில் இப்படி ஒரு பேரிடி விழுந்து உமாபதியின் வாழ்க்கையில் விதி விளையாடிவிட்டதை அறிந்து அனைவரும் சோகமாகியுள்ளனர்.
 
'அதாகப்பட்டது மகாஜனங்களே'. படம் மட்டுமின்றி கவுதம் கார்த்தின் 'இவன் தந்திரன்' உள்பட இன்று வெளியான ஏழு படங்களுக்கும் இதே கதி என்பது குறிப்பிடத்தக்கது.