வியாழன், 12 செப்டம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2024 (08:03 IST)

'வாழை’ படம் பார்த்த அமைச்சர் உதயநிதி.. ஒரு ஆண்டுக்கு முன்பே என்ன சொன்னார் தெரியுமா?

மாரி செல்வராஜ் இயக்கிய வாழை திரைப்படத்தை பார்த்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டரில் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துக்கு மாரி செல்வராஜ் தனது நன்றியை தெரிவித்துள்ளார். படம் பார்த்த அமைச்சரின் கருத்தையும் நன்றி தெரிவித்த மாரி செல்வராஜ் பெற்று தற்போது பார்ப்போம்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்:

படம் பார்த்த அனைவரையும் பசித்த சிவனணைந்தானாக்கியது #வாழை! திரைப்படத்தின் வெற்றி’ என்ற இலக்கைத் தாண்டி சமூகத்தில் ‘வாழை’ ஏற்படுத்தியுள்ள அதிர்வலைகளை சுட்டிக்காட்டி அதன் இயக்குநர் மாரி செல்வராஜ்  சாரை இன்று நேரில் வாழ்த்தினோம். விளிம்பு நிலை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் - அவர்களின் வலிகளையும் அனுபவங்களின் வாயிலாகத் திரைமொழியில் பேசுகின்ற மாரி சாரின் கலை மென்மேலும் சிறக்கட்டும்!

மாரி செல்வராஜ்:

வாழை திரைப்படத்தை ஓராண்டுக்கு முன்பே முதல் ஆளாய் பார்த்து பாராட்டியதோடு இன்று வாழை பெற்றிருக்கும் மாபெரும் வெற்றிக்காக என்னை நேரில் அழைத்து பாராட்டி கொண்டாடிய மாண்புமிகு விளையாட்டுத்துறை அமைச்சர் திருஉதயநிதி ஸ்டாலின்  சார் அவர்களுக்கு என் நன்றியையும் ப்ரியத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் .(இன்று நீங்கள் கொடுத்த அந்த குட்டி பரிசு அவ்வளவு பெரிய மகிழ்ச்சியை கொடுத்தது. )

Edited by Siva