1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 28 நவம்பர் 2022 (09:42 IST)

உதயநிதி ஸ்டாலினின் அடுத்த ரிலீஸ்… கண்ணை நம்பாதே படத்தின் போஸ்டர்!

சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏவும் திமுக இளைஞரணி செயலாளரும், நடிகரும் தயாரிப்பாளருமான உதயநிதி ஸ்டாலின் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இதையடுத்து சினிமாத் துறையினர், அரசியல்வாதிகள் என அனைவரும் பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்திருந்தனர்.

இந்நிலையில் அவர் நடித்து நீண்ட காலமாக ரிலீஸ் ஆகாமல் இருந்த அவரின் கண்ணை நம்பாதே படத்தின் முதல் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. ஆக்‌ஷம் கிரைம் திரில்லர் வகைமையில் உருவாகும் இந்த படத்தை இரவுக்கு ஆயிரம் கண்கள் திரைப்படத்தின் இயக்குனர் மு மாறன் இயக்கியுள்ளார்.

இந்த படம் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் ரிலீஸ் ஆக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.