செவ்வாய், 26 செப்டம்பர் 2023
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 25 நவம்பர் 2022 (09:08 IST)

மணிரத்னம் படத்துக்கு முன்பே கமல் நடிக்கும் படம்… உதயநிதி ஸ்டாலின் பகிர்ந்த தகவல்!

நாயகன் படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகள் கழித்து இயக்குனர் மணிரத்னமும், நடிகர் கமல்ஹாசனும் ஒரு படத்தில் இணைந்துள்ளனர்.

1987 ஆம் ஆண்டு வெளியான நாயகன் திரைப்படம், தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது. அந்த படத்துக்காக கமல்ஹாசன் இரண்டாவது முறையாக தேசிய விருதைப் பெற்றது.

படம் ரிலீஸ் ஆன போது கிடைத்த வரவேற்பை விட நாளாக ஆக அந்த படத்தின் மதிப்பு நாளுக்கு நாள் கூடி, இக்காலத்தைய ரசிகர்களையும் வெகுவாகக் கவர்ந்து ஒரு கல்ட் திரைப்படமாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது.

அந்த படத்துக்குப் பிறகு 35 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது கமல்ஹாசன் – மணிரத்னம் கூட்டணி இணைந்துள்ளது. இந்த படம் 2024 ஆம் ஆண்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தைத் தயாரிப்பாளர்களில் ஒருவரான உதயநிதி ஸ்டாலின், இந்த படத்துக்கு முன்பாகவே கமல்ஹாசன் ஹெச் வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக சமீபத்தில் அளித்த ஒரு நேர்காணலில்க் தெரிவித்துள்ளார்.