1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By cauveri manickam
Last Modified: திங்கள், 5 ஜூன் 2017 (13:36 IST)

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின்

பிரியதர்ஷன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிக்கப் போவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது.



ஃபஹத் ஃபாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. திலீஷ் போத்தன் இயக்கிய இந்தப் படம், தமிழில் ரீமேக் ஆகிறது. பிரபல இயக்குநர் பிரியதர்ஷன் இயக்க, உதயநிதி ஸ்டாலின் நடிக்கிறார். மூன்ஷாட் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் தயாரிக்கிறார்.

தற்போது தளபதி பிரபு இயக்கத்தில் ‘பொதுவாக எம்மனசு தங்கம்’, கெளரவ் இயக்கத்தில் ‘இப்படை வெல்லும்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின். இந்தப் படங்களின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. பிரியதர்ஷன் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகளைப் பற்றிய விவரங்கள் அறிவிக்கப்படவில்லை