வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : செவ்வாய், 10 ஆகஸ்ட் 2021 (15:22 IST)

உடன்பிறப்பே... சூர்யாவை உருட்டியெடுக்கும் அரசியல் கேள்விகள்!

கத்துக்குட்டி என்ற படத்தின் இயக்குனர் து ப சரவணன் இயக்கத்தில் சசிக்குமார் மற்றும் ஜோதிகா நடிப்பில் உடன்பிறப்பே என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது.
 
இந்த படத்தின் போஸ்டர் அண்மையில் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. இதில் ஜோதிகாவின் கணவராக சமுத்திரக்கனி நடிக்கிறார். அண்ணனாக சசிகுமார் நடிக்கிறார். கலைஞரின் அடையாள வார்த்தைகளில் ஒன்றாக கருதப்படும் "உடன்பிறப்பே" படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளதால் ஆளுங்கட்சி ஆதரவான படமாக இருக்குமோ என யூகிக்க முடிகிறது. ஆனால், சூர்யாவோ படத்தை பார்த்தால் இந்த கேள்வி கேட்கவே தோணாது என கூறி வருகிறாராம்.