வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Cauveri Manickam (Sasi)
Last Updated : செவ்வாய், 12 செப்டம்பர் 2017 (12:06 IST)

விஜய் சேதுபதி படத்துக்கு ‘யு’ சான்றிதழ்

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘கருப்பன்’ படத்துக்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

 
 
‘ரேணிகுண்டா’ படத்தை இயக்கிய பன்னீர்செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் ‘கருப்பன்’. தன்யா ஹீரோயினாக நடித்துள்ள இந்தப் படத்தில், பாபி சிம்ஹா வில்லனாக நடித்துள்ளார். ‘ஆடுகளம்’ கிஷோர், பசுபதி, சிங்கம்புலி, சரத் லோகிதாஸ்வா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இந்தப் படத்தைப் பார்த்த சென்சார் அதிகாரிகள், படத்துக்கு ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். எனவே, செப்டம்பர் 29ஆம் தேதி படம் ரிலீஸாகுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு இந்தப் படத்தின் ஒரு பகுதியாக இருந்தாலும், மாணவர்களின் போராட்டம் இதில் காண்பிக்கப்படவில்லை என்கிறார்கள்.