வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 25 பிப்ரவரி 2022 (12:53 IST)

’வலிமை’ ரிலீஸ்: காவலரின் கையை கடித்த அஜித் ரசிகர்கள் இருவர் கைது!

’வலிமை’  ரிலீஸ் தினத்தில் காவலரின் கையைக் கடித்த இரண்டு அஜித் ரசிகர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 
 
அஜித் நடித்த ’வலிமை’ திரைப்படம் நேற்று ரிலீஸ் ஆகிய நிலையில் சென்னை உள்பட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் இந்த படத்தை காண ஏராளமான ரசிகர்கள் திரையரங்குகளில் குவிந்தனர் 
 
அந்தவகையில் நேற்று திருச்சி லால்குடி யில் உள்ள ஒரு திரையரங்கில் ’வலிமை’ படத்தை பார்ப்பதற்காக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர். அப்போது அஜீத் ரசிகர்கள் போக்குவரத்திற்கு இடையூறு இருப்பதாக காவலர் ஒருவர் கண்டித்தார் 
 
அஜித் ரசிகர்களை கண்டித்த காவலர்களின் கையை இரண்டு ரசிகர்கள் கடித்ததால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து காவலரை கண்டித்து அஜித் ரசிகர்கள் இருவர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.