1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Updated : வியாழன், 27 ஜூலை 2017 (21:34 IST)

சங்கமித்ராவில் பிக் பாஸ் புகழ் ஓவியா??

நடிகை ஓவியா 2010 ஆம் களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதன் பின்னர் பல படங்களில் நடித்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை.


 
 
தற்போது அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியால் இழந்த மீண்டும் பெற்றுள்ளார். பிக் பாஸ் மூலம் ஓவியா அனைவருக்கும் பிடித்த பெண்ணாக மாறியுள்ளார். மேலும், ஓவியா ஆர்மி, ஓவியா புரட்சி படை போன்றவற்றை உருவாக்கி பல இளைஞர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
 
இந்நிலையில், டிவிட்டர் பக்கத்தில் சங்மித்ரா படத்தில் யார் நாயகியாக நடிக்கலாம் என கேட்டப்பட்ட கேள்விக்கு பலரும் ஓவியாவின் பெயரை பரிந்துரைத்துள்ளனர். 55% வாக்குகள் பெற்று ஓவியா படத்தில் நடிக்க ரசிகர்களிடம் இருந்து ஓகே வாங்கியுள்ளார்.
 
ஆனால் இந்த படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஓகே சொல்வார்களா என்பது சந்தேகத்திற்கு உரிய கேள்வி. ஓவியா ஏற்கனவே சிந்தர்.சி இயக்கத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.